விவாகரத்து முடிவால் நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன் – உருக்கமாக பேசிய சமந்தா..

by Column Editor
0 comment

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா, கடந்த அக்டோபர் மாதம் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.

சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றே கூறலாம். மேலும் அவர்களின் பிரிவு குறித்து பல்வேறு வந்தந்திகளும் பரவி வந்தது.

சமந்தா முன்பு தனது விவாகரத்து முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்து இருந்தார். இதனிடையே தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது “ஆரம்பத்தில் நான் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்தேன். விவாகரத்து பிரிவால், நான் நொறுங்கி இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். நான் இவ்வளவு வலிமையானவளாக இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை .

இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு வலிமையுடையவள் என்பது இதற்கு முன் எனக்கு தெரியாது” என தெரிவித்துள்ளார் சமந்தா.

Related Posts

Leave a Comment