கொரோனா விதிமுறைகளை மீறியதாக நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் தன் ஆடை நிறுவனத்தின் அறிமுக விழாவிற்கு சென்று இந்தியா திரும்பி வந்தபோது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்ததாகத் தெரிவித்திருந்தார். அதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எனவே அவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒரு வாரம் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவிலிருந்து மீண்ட கமல் நேரடியாக ருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று கொரோனா விதிமுறைகளை மீறியது தொடர்பாக கமலுக்கு தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்று கூறியிருக்கிறார்.