பிரபல விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5, இதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வெங்கட் சமீபத்தில் வீட்டிற்குள் நுழைந்தார்.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கமல் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர் தான் ஐக்கி பெர்ரி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடி கொண்டிருந்த இவர் எதிர்பாராத வகையில் வெளியேற்ற பட்டார்.
இதனிடையே தற்போது ஐக்கி பெர்ரி அவரின் சக பிக்பாஸ் போட்டியாளரான அண்ணாச்சியின் குடும்பத்தை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.