இன்றைய ராசி பலன்கள்

by Column Editor
0 comment

இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.

பொதுவாக நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் :
தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும் நாள். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் நலனுக்க ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.

ரிஷபம் :
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். மறதி அதிகரிக்கும். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். விரயங்கள் கூடும். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டுமுறை அலைய நேரிடும்.

மிதுனம் :
காலையில் கலகலப்பும், மதியத்திற்கு மேல் சலசலப்பும் ஏற்படும் நாள். பயணங்களை மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் வந்து சேரும் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

கடகம் :
உற்சாகத்துடன் செயல்படும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.

சிம்மம் :
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் தொடரும். மருத்துவச் செலவு கூடும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

கன்னி :
தடைகள் அகலத் தைரியமாக முடிவெடுக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொலை தூரத்தில் இருந்து வந்த தகவல் மகிழ்ச்சி தரும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

துலாம் :
கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். நட்பால் நன்மை உண்டு. பம்பரமாகச் சுழன்று பணி புரிந்து பலரது பாராட்டுகளையும் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி பெறும்.

விருச்சகம் :
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு.

தனுசு :
மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.

மகரம் :
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம்மாறுவர். பணவரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர். வழக்குகள் சாதகமாக முடியும்.

கும்பம் :
முன்னேற்றம் கூடும் நாள். எதிரிகள் விலகுவர். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். வீட்டைச் சீரமைப் பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.

மீனம் :
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.

Related Posts

Leave a Comment