2022-ம் ஆண்டின் சனியின் கோரப்பார்வை! எந்த ராசிக்கு சோதனை, சாதனை புரியும் ராசியினர்கள் யார்?

by Column Editor
0 comment

2022-ம் ஆண்டு சனி பகவான் இரண்டு முறை தன் நிலையில் இருந்து மாறுவார். அப்போது அவர் ராசியையும் மாற்றுவார். இந்த மாற்றம் அனை-த்து ராசிகளிலும் பெரிய தாக்க-த்தை ஏற்படுத்துவார்கள்.

இவற்றில் 8 ராசிகள் மீது இந்த வருடம் முழுவதும் சனியின் கண் பார்வை இருக்குமாம். இதனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

இது அவரது சொந்த ராசியாகும். சனி பகவான் இந்த ராசிக்குள் 30 வருடங்களுக்குப் பிறகு பிரவேசிக்கப் போகிறார். மேலும், சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தவுடன் கடகம், மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் ஆரம்பமாகும்.

இதோடு, மீன ராசிக்காரர்-களுக்கு ஏழரை நாட்டு சனியும் தொடங்கும். ஏழரை நாட்டு சனி இந்த ராசிக்காரர்களை பல வழிகளில் தொந்தரவு செய்யும். ஆனாலும், கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். சனிபகவான் தனது ராசியான கும்ப ராசிக்காரர்களிடம் கருணை காட்டுவார். அவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்வார்.

இதை தவிர, மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கும் சனிபகவானின் ஏழரை நாட்டு சனி நிறைவடையும். இந்த நிவாரணம் அவர்களுக்குப் பல நன்மைகளைத் தரும்.

2022-ம் ஆண்டில், சனி பகவானின் நிலையில் இரண்டாவது மாற்றம் 12 ஜூலை 2022 அன்று நிகழும். இந்த நாளில் சனி பகவான் பின் நோக்கி நகர்ந்து முந்தைய ராசியான மகர ராசிக்குள் நுழைவார்.

இந்த பெயர்ச்சியால், தனுசு, மிதுனம் மற்றும் துலாம், ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மீண்டும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜனவரி 17, 2023 வரை சனி பகவான் இந்த ஸ்தானத்தில் இருப்பார். எனினும் இக்காலத்தில் மீனம், கடகம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் தோஷம் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment