நடிகர் கமல்ஹாசனுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு வார சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்ட கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் முன்பு போல் இல்லாமல் படப்பிடிப்பில் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவர் தன்னை ஒரு வாரத்திற்கு தனிப்படுத்தி கொள்ள வேண்டும், ஆனால் கமல் நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதனால் தற்போது அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.