நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது, மேலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் பாதியிலே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள கமல் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவர் மருத்துவர்களுடன் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.