பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வாரா கமல்? கொரோனா தொற்று குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

by Column Editor
0 comment

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல் தற்போது நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்தியன், விக்ரம் என படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் கமல் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதற்குபின் அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கமல்.

கமலுக்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் கமிட்டாகியுள்ள விக்ரம், இந்தியன் 2 உள்ளிட்ட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு பதிலாக கடந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அந்த வாரத்தில் தீர்ப்பளித்திருந்த ரம்யா சரியாக போட்டியாளர்களை கவனிக்க வில்லை என்கிற புகார் எழுந்தது. அதோடு கமல் தொகுத்து வழங்குவது போலில்லை என ரசிகர்கள் பீல் செய்தனர். இதனால் இந்த வாரம் எப்படி போகப்போகுதோ என்னும் தவிப்பு ரசிகர்கள் மத்தியில் பற்றிக்கொண்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில்இருந்து இன்று வீடு திரும்பியுள்ள கமல்; தான் நோய் தொற்றிலிருந்து குணமாகி பணிக்கு திரும்பியுள்ளதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனை மூலம் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் தயாராகி உள்ளதால் பிக் பாஸ் ரசிகர்களுக்கு இந்த வாரம் விருந்து நிச்சயமாகியுள்ளது.

Related Posts

Leave a Comment