Bigboss நிகழ்ச்சி எத்தனை சீசன் வந்தாலும் முதல் சீசனை யாராலும் மறக்க முடியாது.
அதிலும் ஜுலி, ஓவியா சண்டை தான் டாக் ஆப் தி டவுனாக அந்த சமயத்தில் இருந்தது.
இந்நிலையில் ஜுலி அதை தொடர்ந்து சில படங்களில் கமிட் ஆனார், சில ஷோக்களில் கூட தொகுப்பாளராக இருந்தார்.
தற்போது ஜுலியை அவருடைய காதலன் ஏமாற்றிவிட்டதாக அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் அவருடைய காதலன் தன்னிடம் பல்சர் பைக் வாங்க பணம், நகைகள் எல்லாம் வாங்கிக்கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்.