107
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று புயலாக உருவெடுத்துள்ளது.
இந்த புயலுக்கு “ஜவாத்” என பெயரிடப்பட்டுள்ளது, இதன் காரணமாக சென்னை சென்ட்ரல்- ஹௌரா கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்பட 18 ரயில்களின் இயக்கும் இன்று (டிச.3) ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவான புயலாக வடக்கு ஆந்திரா, ஒடிசா இடையே நாளை கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனை அடுத்து நாளை ஒடிசாவிலும், டிசம்பர் 5 ஆம் தேதி மேற்கு வங்காளத்திலும், அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.