சிம்புவிடம் இதயத்தை பகிர்ந்த பிரபல இளம் நடிகை!அட.. யார்னு பார்த்தீங்களா! வேற லெவலில் தெறிக்கும் கமெண்ட்டுகள்!!

by Column Editor
0 comment

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இத்திரைப்படம் பல எதிர்ப்புகளையும் தடைகளையும் தாண்டி கடந்த 25ஆம் தேதி ரிலீஸ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே சூர்யா, சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாநாடு திரைப்படம் ரிலீஸாகி விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் மாநாடு வெற்றிக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷும் பல தடைகளைத் தாண்டி, இப்படியொரு அற்புதமான படத்தை படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் எனக்கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் சிம்பு ஹார்ட் எமோஜியை பகிர, பங்கிற்கு கீர்த்தி சுரேஷும் ஹார்ட் எமோஜியை அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்ட நெட்டிசன்கள், அட இருவருக்கும் காதல் ஏற்பட்டு விட்டதா?, சிம்புவுக்கு பொண்ணு ரெடியாகியாச்சு! என கொளுத்தி போட்டுள்ளனர். மேலும் சிலர் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சிம்புக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என கமெண்டு செய்து வருகின்றன.

Related Posts

Leave a Comment