என்னை தல என்று அழைக்க வேண்டாம் – நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்

by Column Editor
0 comment

நடிகர் அஜித் குமார் தல என்று என்னை அழைக்க வேண்டாம் என ஊடகங்கள் மற்றும் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல முன்னனி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.இவரை அவரது ரசிகர்கள் புனைப்பெயரான தல என அழைத்து வந்தனர்.

இந்நிலையில் அவர் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவரின் மேனேஜர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பதிவில் பெரும் மரியாதைக்குரிய ஊடக,பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை எழுதும் போதோ,

என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை,வெற்றி,மன அமைதி,மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துவதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment