கொரோனாவிலிருந்து மீண்ட கமல், வழக்கமான பணிகளைத் தொடரலாம்… மருத்துவமனை அறிக்கை!

by Column Editor
0 comment

நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவனமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் ஹவுஸ் ஆஃப் கதர் என்ற தனது பேஷன் பிராண்டை தொடங்க அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் சுவாச குழாயில் லேசான நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் தனது வழக்கமான பணிகளைத் தொடரலாம் என்றும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கையில் “கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் நவம்பர் 22 – ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு காணப்பட்ட மிதமான தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது முழுமையாக குணமடைந்த அவரை, டிசம்பர் 3 – ம் தேதி வரை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 4 – ம் தேதியிலிருந்து அவர் தனது வழக்கமான பணிகளைத் தொடரலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment