அட.. இவங்களுமா! சூப்பர் ஜோடியாச்சே! ரியல் காதலர்களாக மாறிய பிரபல சீரியலின் ரீல் ஜோடி! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!

by Column Editor
0 comment

சமீப காலமாக தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் பிரபலங்கள், நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதாவது தொடர்களில் ரீல் ஜோடியாக நடித்த ஸ்ரேயா-சித்து, மதன்-ரேஷ்மா மற்றும் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஷபானா-ஆர்யன் ஆகியோர் நிஜத்திலும் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் வரிசையாக திருமணம் செய்து கொண்டனர். இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அந்த வரிசையில் தற்போது புதிய ஜோடியும் இணைந்துள்ளது. அதாவது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் அம்மன். இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் அமல்ஜித் மற்றும் பவித்ரா. தொடரில் ஜோடியாக நடித்து வந்த இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இருவரும் அவ்வப்போது ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த ஜோடி தங்களது காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். அதாவது அமல்ஜித் தாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை என்னில் பாதி என்பது போன்ற பதிவுடன் வெளியிட்டுள்ளார். மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment