158
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சமூக வளைதலங்களில் நடிகர் கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக தகவல் தீயாக பரவியது.
இதையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால் அந்த தகவல் அனைத்து பொய்யானது என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ், தலைவர் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை ஆனால் நலமுடன் இருக்கிறார்.
விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார். மேலும் சமூக வளைதலங்களில் உலவும் புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.