மறைந்த “மன்மத ராசா” நாயகன் ; சிவசங்கர் மாஸ்டரின் இறுதி அஞ்சலி!!

by Column Editor
0 comment

மறைந்த “மன்மத ராசா” புகழ் சிவசங்கர் மாஸ்டரின் இறுதி அஞ்சலி அவரது இல்லத்தில் நடைபெற்று வருகிறது.

தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலில் பணியாற்றியதன் மூலம் சிவசங்கரின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது. அஜித் நடித்த வரலாறு, சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, பாலாவின் பரதேசி, சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்தவர் சிவசங்கர் மாஸ்டர். பூவே உனக்காக, விஷ்வதுளசி, வரலாறு, உளியின் ஓசை போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் மற்றும் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா ஏற்பட்டதாகவும், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவுக்கு உதவுங்கள். தொழில்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன். என சிவசங்கர் மாஸ்டரின் மகன் உதவி கேட்டுள்ளார். இந்த ட்வீட் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வந்தது. இதையடுத்து தனுஷ், சிரஞ்சீவி, சோனு சூட் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சிலர் அவருக்கு உதவிக்கரம் நீட்டினர்.

இந்நிலையில், நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். சிவசங்கர் மாஸ்டரின் உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இழப்பு குறித்து சோனு சூட், குஷ்பு, ராஜமௌலி,பிரபுதேவா உள்ளிட்ட திரைபிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment