திருப்பதி ஏழுமலையானை இலவசமா தரிசிக்க..!! – ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு..

by Column Editor
0 comment

பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்று தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு சென்று வழிபட்டு வருவர். இங்கு இலவசமாக ஏழுமலையானை தரிசிக்க, குறிப்பிட்ட அளவு டோக்கன்கள் வழங்கப்படுகிறது. டைம் ஸ்லாட் டோக்கன் எனப்படும் இந்த டிக்கெட்டுகள், கொரோனா பரவலுக்குப் பின் நேரில் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.

மாறாக ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அடுத்த மாதத்துக்கான (டிசம்பர்) இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணியளவில், திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டும், இலவச தரிசன டிக்கெட்டுகளும் வெளியாகியிருக்கிறது. இந்த டிக்கெட்டுகள் மூலம், குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கலாம். அதோடு பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான அறைகள் குறித்த விவரங்கள், நாளை (ஞாயிறு) காலை 9 மணியளவில் தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment