போயஸ் கார்டன் வீட்டை வாங்கிய நயந்தாரா…

by Column Editor
0 comment

சென்னை போயஸ் கார்டனில் நடிகை நயன்தாரா பல கோடி மதிப்புள்ள இரண்டு வீடுகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரத்குமார் துவங்கி சூப்பர் ஸ்டார் வரை தமிழ் திரையுலக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. மற்ற ஹீரோயின் போலவே வெறும் கனவு கன்னியாக பார்க்கப்பட்ட நயன்தாரா அறம், மாயா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் ,கோலமாவு கோகிலா, டோரா என் தாமஸ் என்ட்ரி கொடுத்தார். இதன் பிறகு லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படடர் நயன்தாரா. பின்னர் விஸ்வாசம், தற்போது வெளியான அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்திருந்தார்.

சமீபத்தில் தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாராவுக்கு, அவரது காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடிய வீடியோக்கள் செம்ம வைரலாகி வந்தது. அதோடு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்க உள்ள, புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் புதிய படத்தை அவருடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது அனுபம்கெர், நயன்தாரா மற்றும் சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு மிகவும் வித்தியாசமாக ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு அறிவித்தது படக்குழு.

இந்நிலையில் நடிகை நயன்தாரா விவிஐபி ஏரியாவான சென்னை போயஸ் கார்டனி ல் 4 பெட்ரூம் கொண்ட இரண்டு அபார்ட்மெண்டுகளை வீடு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. . பல கோடி மதிப்புள்ள இந்த வீட்டிற்கு நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் விரைவில் குடிபெயர உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தின் வீடு போயஸ் கார்டனில் தான் உள்ளது. அவரை தொடர்ந்து அவரது மருமகனும் நடிகருமான நடிகர் தனுஷும் போயஸ் கார்டனில் இடம் வாங்கி பிரம்மாண்டமாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்.

Related Posts

Leave a Comment