பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் அடுத்த வாரம் நடிகர் விக்கி கௌஷலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் ராஜஸ்தானில் நடந்து வருகிறது.
இந்நிலையில் திருமண விழாவில் கத்ரினா போட்டுக்கொள்ளும் மெஹந்திக்காக ஆகியிருக்கும் செலவு பற்றிய விவரம் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
கத்ரீனாவுக்காக ஸ்பெஷலாக Sojat மெஹந்தி ஜோத்பூரில் உள்ள பாலி என்னும் இடத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அதனை ஸ்பெஷலாக செய்வதற்கென்று இருக்கும் நபர்கள் தான் அதனை செய்ய இருக்கின்றனர். முற்றிலும் இயற்கையான முறையில் உருவாக்கும் அந்த மெஹந்தி உடன் எந்த கெமிக்கல் கலக்கப்படுவதில்லை.
முழுமையாக கையால் தயாராகும் அந்த மெஹந்தியை கத்ரீனா கைப்புக்கு அவர்கள் அனுப்பி வைக்க இருக்கின்றனர். அதன் விலை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் அதற்காக கத்ரீனாவிடம் அந்த நபர் பணம் எதுவும் வாங்கவில்லையாம். அவருக்கு இலவசமாகவே அனுப்புவதாக கூறி இருக்கிறாராம். ராஜஸ்தானில் நடைபெறும் திருமணத்திற்கு முன்பு மும்பையில் விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா திருமணம் நடைபெற இருக்கிறது.
அதற்கு பிறகு தான் அவர்கள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் சென்று மிக பிரம்மாண்டமான திருமண விழாவில் பங்கேற்கின்றனர்.