நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி… 25 லட்சம் வென்று தொண்டு நிறுவனத்திற்கு அளித்த மகேஷ் பாபு!

by Column Editor
0 comment

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ரூ. 25 லட்சம் வென்றுள்ளார்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி எவரு மீலோ கோடீஸ்வராலு என்ற பெயரில் தெலுங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில்கலந்துகொண்டுள்ளார். அதற்கு ப்ரோமோ வெளியான போது பெரிய எதிர்பார்ப்பு உருவானது. மேலும் மகேஷ் மற்றும் தொகுப்பாளர் ஜூனியர் என்டிஆர் இடையே பகிரப்பட்ட நகைச்சுவை மற்றும் அரவணைப்பை ப்ரோமோ எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இந்த எபிசோட் மிகவும் ஸ்பெஷல் என்பதால் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் அந்த எபிசோடிற்கு “சூப்பர் டைகர் எபிசோட்” என்று பெயரிட்டுள்ளனர்.

மகேஷ் பாபு விளையாடிய எபிசோட் டிசம்பர் 2 ஆம் தேதி திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரசியமாக மகேஷ் பாபு இந்த நிகழ்ச்சியில் ரூ. 25 லட்சம் வென்றுள்ளார். மேலும் அந்த பணம் தொண்டு நிறுவனத்திற்குச் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பலரது மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Related Posts

Leave a Comment