கமல்ஹாசன் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்!

by Column Editor
0 comment

கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதி ஹாசன் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் தன் ஆடை நிறுவனத்தின் அறிமுக விழாவிற்கு சென்று இந்தியா திரும்பி வந்தபோது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்ததாகத் தெரிவித்திருந்தார். அதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

“அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என குறிப்பிட்டிருந்தார்.

தற்போது கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கமல்ஹாசனின் உடல்நிலை குறித்த அறிக்கையும் சமீபத்தில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில், “சுவாச பாதை தொற்று & காய்ச்சல் (lower respiratory tract infection) காரணமாக SRMC-யில் நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு இருக்கிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது.” என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். அதில் “எனது தந்தையின் ஆரோக்கியத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவித்த மற்றும் பிரார்த்தித்த அனைவர்க்கும் நன்றி. அவர் நலமுடன் இருக்கிறார், விரைவில் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார் !!” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment