அமெரிக்காவில் நடைபெற்ற கதர் ஆடை விளம்பரத்திற்கு பிறகு சென்னை வந்த கமலுக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் உறுதியானது. இதை அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவது என்ற கேள்விகள் வைரலாகி வந்தது.
அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் அல்லது சூர்யா என பேச்சு வெளியாக, விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் பெயரும் இடம்பெற்றது. இன்னும் மூன்று நாட்கள் இருக்கையில் யார் என்று பலர் குழம்பி புலம்பி வருகிறார்கள். இந்நிலையில் இணையத்தில் ஒரு செய்தி வைரலாகி பரவி வருகிறது.
அதில் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து கொண்டே லை கான்ஃபரன்ஸில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாகவும் செய்தி ஒன்று பரவி வருகிறது.
அப்படியிருந்தால் மருத்துவமனை அதற்கு எப்படி சம்மதம் தெரிவிக்கும் என்றும், உடல் நலக்குறைபாடு அதிகமாக பேசினால் தொண்டை வலிக்கும் என்றும் கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
@ikamalhaasan நம்மவர், கடமை தவறியதா வரலாறே கிடையாது! இனிமேயும் அது நடக்காது! @maiamofficial @ibalamurugan72 #KamalHaasan pic.twitter.com/qkqjporVo3
— (NO QUITTING) (@ulaganayagan1) November 23, 2021