பிக் பாஸ் ஆரவுக்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்

by Column Editor
0 comment

சின்னத்திரையின் வெற்றிகரமாக நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனுடைய 5வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் கமல் ஹாசனுக்கு பதிலாக வேறுஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டவர் நடிகர் ஆரவ். கலந்துகொண்டது மட்டுமல்லாமல், ரசிகர்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார். இவருக்கு கடந்த வருடம் நடிகை Raahei-யுடன் காதல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நடிகை Raahei-க்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் தற்போது நலமாக உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த ஆரவின் ரசிகர்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment