ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்துகிறது. பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளதாக வோடபோன்- ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள், பற்றிய தகவலை அறிவித்துள்ளது.
அதன் படி வோடபோன் , 28 நாட்கள் கொண்ட பேக் அன்லிமிடெட் கால்ஸ் 2GB ரூ 149 ல் இருந்து ரூ 179 அக உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நவ, 25 முதல் அமலுக்கு வருவதாக வோடபோன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.