நாகர்ஜுனா மற்றும் நாக சைதன்யா நடிப்பில் உருவாகும் பங்கர்ராஜு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இன்று நடிகர் நாகசைதன்யா தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் பங்கர் ராஜு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் நாகசைதன்யா மாஸாக காணப்படுகிறார்.
நாகர்ஜுனா மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து பங்கர்ராஜு படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் உப்பேனா பட நடிகை க்ரீத்தி ஷெட்டி நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ZEE ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.அனூப் ரூபன் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு டோலிவுட்ல அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.