97
விஜய்யில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா வேடத்தில் முதலில் நடித்து வந்தவர் ஜெனிபர். அந்த வேடத்தின் மூலம் ராதிகாவிற்கு நல்ல ரசிகர்கள் கூட்டம் ஏற்பட்டது.
அவரை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
பின் தான் கர்ப்பமாக இருப்பதாக சீரியலில் இருந்து வெளியேறியதாக சந்தோஷ செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்தார். இவரும் கர்ப்ப காலத்தில் நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி வந்தார்.
அண்மையில் கூட தனது கணவருடன் இணைந்து தண்ணீருக்கு அடியில் போட்டோ ஷுட் நடத்தினார், அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் நடிகை ஜெனிபருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.