நடிகர் கமல் அமெரிக்காவில் திரும்பும் போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும், பின் பரிசோதனைக்கு பின் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில் கமல் சில அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு கொரோனா பாசிட்டிவ்-ஆக இருந்தது என்றும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.