சென்னை ரசிகர்களின் செல்லப்பிள்ளை டோனி -முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

by Column Editor
0 comment

தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.சென்னை:

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி முதல்-அமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

சென்னை அணிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை என்றாலே சூப்பர்தான். முதல்வராக அல்ல, டோனியின் ரசிகராக பாராட்டு விழாவிற்கு வந்திருக்கிறேன். எனது குடும்பமே டோனியின் ரசிகர்தான். எனது தந்தை, மகன்,பேரன் என அனைவருமே டோனியின் ரசிகர்கள்தான். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் நான்.டோனி சென்னை ரசிகர்களின் செல்லப்பிள்ளை. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர். தங்களில் ஒருவராக டோனியை தமிழர்கள் கருதுகிறார்கள். எந்த நெருக்கடியிலும் ‘கூல்’ ஆக இருப்பவர்கள் கருணாநிதியும், டோனியும். டோனியைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

Related Posts

Leave a Comment