இசைஞானி இளையராஜாவின் புகைப்படம் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இசைஞானி இளையராஜா இந்திய சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர். உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவின் இசை வரலாற்றின் பக்கங்களில் பெரும் பகுதியை இளையராஜா தான் நிரப்பியிருப்பார். நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கும் இளையராஜா பாடல் தான் உற்ற நண்பனாக இருந்து வருகிறார். தற்போதும் இளம் இசையமைப்பாளர்களுக்கு இணையாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு பெருமையாக புகழ்பெற்ற நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் உள்ள பில்போர்டில் இசையின் ராஜாவின் விளம்பரம் இடம் பெற்றுள்ளது.
ஸ்பாட்டிபை இசை செயலிக்கான விளம்பத்தில் இளையராஜாவின் புகைப்படம் டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் இடம் பெற்றுள்ளது. இது தமிழ் இசை ரசிகர்களுக்கு பெருமைமிகு தருணமாக அமைந்துள்ளது.