சில நிமிடங்களில் ஆரம்பமாகும் சந்திர கிரகணம்: கர்ப்பிணி பெண்களே உஷார்! இந்த நேரத்தில் சாப்பிடலாமா?

by Column Editor
0 comment

இன்று நீண்ட சந்திர கிரகணம் சுமார் சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு இன்னும் சில நிமிடங்களில் நிகழ உள்ளது.

இதற்கு முன்பு இந்த நீண்ட சந்திர கிரகணம் 1440ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நிகழ்ந்துள்ளது. இத்தகைய நிகழ்வு மீண்டும் 2669ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி நிகழுமாம்.

சந்திரனை பூமி முழுமையான மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதியினை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்று கூறப்படுகின்றது.

இந்திய நேரப்படி இன்று காலை 11.32 மணி முதல் மாலை 5.34 மணி வரை அதாவது 6 மணி நேரம் 2 நிமிடம் இந்த சந்திர கிரகணம் நீடிக்கின்றது.குறித்த சந்திர கிரகணத்தை வடகிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் பார்க்கமுடியும்.

கர்ப்பிணி பெண்கள்

இந்த சந்திர கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் கர்ப்பிணி பெண்கள் மீது இந்த வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பாதிக்கக்கூடிய சில கதிர்வீச்சுகள் தாக்குவதற்கு அதிகமாக வாய்ப்பு இருக்கின்றது.இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக்க இருக்கவும்.

இந்த கிரகண நேரத்தில் சாப்பிடலாமா?

சூர்ய மற்றும் சந்திர கிரகண நேரங்களில் சமையல் செய்யவோ சாப்பிடவோ கூடாது.தண்ணீர் அருந்தவும், நகம் கிள்ளவும் கூடாது, எந்த வேலையும் செய்யக்கூடாது.உணவுப்பொருட்களில் கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க தர்பையை போட்டு மறைத்து வைப்பது நம் மரபாகும்.முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம்.

கிரகண நேரத்தில் விளக்கேற்றலாமா?

சந்திரகிரகண நேரத்தில் ஹோமங்கள் செய்வது மிகவம் பலன் தருவதுடன், நூறு மடங்கு புண்ணிங்களையும், பலத்தையும் பெறலாம்.கிரகணம் முடிந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அருகில் கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்யலாம்.அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும்.

Related Posts

Leave a Comment