கழுத்தில் தாலியுடன் திருமண கோலத்தில் சித்தி 2 சீரியல் நடிகை வெண்பா.. ரசிகர்கள் ஷாக்

by Column Editor
0 comment

சித்தி 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரீத்தி ஷர்மா.

இவர் சித்தி 2 சீரியலுக்கு முன், திருமணம் எனும் சீரியலில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் காவ்யாஞ்சலி சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டுள்ள சின்னத்திரை நடிகைகளில் பிரீத்தியும் ஒருவர்.

நடிகை பிரீத்தி ஷர்மா தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாக்ராமில் அவ்வப்போது ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது கழுத்தில் தாலியுடன், திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆனால், இது போட்டோஷூட் மட்டும் தான், என்று அறியாமல் சிலர் பிரீத்தி ஷர்மாவிற்கு திருமணம் நடந்துவிட்டதா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment