இரட்டையர் குழந்தைகளுக்கு அம்மாவான ப்ரீத்தி சிந்தா!

by Column Editor
0 comment

கடந்த 1998-ம் ஆண்டு பிரபல தமிழ் பட இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தில் சே..படம் மூலம் ஷாருக் கானுடன் ப்ரீத்தி நாயர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி சிந்தா.

தில் சே படத்தின் தமிழ் வெர்ஷனான உயிரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரீட்சயமானவர் இவர். அதன் பின் அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் நடித்து தன் கன்னக்குழி அழகால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ப்ரீத்தி கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன் நீண்ட கால நண்பரான ஜூன் குட் இன்ஃப் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு ப்ரீத்தி சிந்தா ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் தோன்றினார்.

இந்நிலையில் ப்ரீத்தி சிந்தா மற்றும் ஜூன் குட் இன்ஃப் இரட்டையர் குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். வாடகை தாயின் மூலம் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டு உள்ளனர்.

Related Posts

Leave a Comment