மருத்துவமனையில் நடிகர் பவர்ஸ்டார்: பேரதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்!

by Column Editor
0 comment

பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இவரது புகைப்படம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இவர் வனிதாவுடன் நடித்த பிக்கப் ட்ராப் திரைப்படத்தின் புகைப்படங்கள் பெரும் வைரலாகியது. லத்திகா திரைப்படம் மூலம் அறிமுகமான பவர் ஸ்டார் சீனிவாசன், கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற பல படத்தில் நடித்து தனது கொமடியினால் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றார்.

கொமடி மட்டுமின்றி ஹீரோவாகவும் வலம் வரும் இவர், தன்னை எவ்வளவு தான் மக்கள் கேலி, கிண்டல் செய்தாலும் அதனை பிளஸ்ஸாக மாற்றிவருகின்றார்.

இந்நிலையில் நடிகர் பவர் ஸ்டாருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.தற்போது எந்த மருத்துவமனையில், எதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரியாத நிலையில் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் உயர்ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்த அவர் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது பரவிரும் இந்த புகைப்படங்கள் அப்பொழுது எடுத்ததாக இருக்குமா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment