உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில்!

by Column Editor
0 comment

பக்தர்களுக்கு செய்து தரும் வசதிகள், சுற்றுப்புற தூய்மை, மாசு ஏற்படாமல் பாதுகாப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

உலக சாதனை புத்தகத்தில் திருமலைக்கு சிறப்பு இடம் கிடைத்திருப்பதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக தேவஸ்தானம் திருமலை மற்றும் திருப்பதியில் பல ஏற்பாடுகளை செய்துள்ளது. திருமலையில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகள், ஓய்வறைகள், முடி காணிக்கை செலுத்துமிடம், லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி, அன்னதானம் வழங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தினசரி பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இருப்பினும் திருமலையில் சுத்தம், சுகாதாரம் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருவதுடன் திருமலையின் பசுமை மாறாமல் உள்ளது. தினசரி லட்சகணக்கான வாகனங்கள் மலைபாதை வழியாக திருமலையை அடைந்தாலும் அதனால் சுற்று சூழல் சீர்கேடு ஏற்படவில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இங்கிலாந்தை சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் திருமலைக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது. இதற்கான சான்றிதழை அந்நிறுவனத்தை சேர்ந்த இந்திய நாட்டின் தலைவர் சந்தோஷ் சுக்லா சார்பில் தென்னிந்திய ஒன்றிய செயலர் முனைவர் உல்லாஜி தேவஸ்தானத்திடம் வழங்கி உள்ளார். இது திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரம்” என்று தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment