முன்னணி டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவை நிறுவனமான பேடிஎம் ஒரே இரவில் 350 முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்களைக் கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது.
தனது மாபெரும் ஐபிஓ மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்திய பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் தனது தொடக்க காலத்தில் பணியாற்றிய பல முக்கியமான ஊழியர்களுக்குப் ESOP திட்டத்தின் மூலம் நிறுவன பங்குகளைக் கொடுத்துள்ளது.
இதனிடையே தற்போது பேடிஎம் ஐபிஓ வெளியிட்டு 18,300 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பெற்றுள்ளது. இதில் ஒரு பங்கு விலை 2,080 – 2,150 ரூபாய் வரையிலான தொகையில் விற்பனை செய்ய உள்ளது. இதனால் ஏற்கனவே நிறுவனப் பங்குகளை வைத்திருக்கும் பலரின் பங்குகள் இன்று பல கோடி ரூபாய்க்கு மதிப்பிற்கு உயர்ந்துள்ளது.
இந்த ஐபிஓ மூலம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய பங்குகளை வைத்துள்ள பேடிஎம் ஊழியர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 350 பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் ஒரு சிறு அலுவலகத்தில் தொடங்கப்பட்டு இன்று 10,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.