யாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிதருவார் : இன்று மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு செல்லும் குருபகவான்

by Column Editor
0 comment

ஜோதிடத்தை பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற நிகழ்வுகளின் போது தன்னுடைய ராசிக்கான பலனை மிகவும் கவனிக்கின்றனர். இங்கு குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கான பலன்களை சுறுக்கமாக பார்ப்போம்.

குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. பொதுவாக குரு தனது 2,5,7,9,11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.

மேஷம்:
குரு அதிர்ஷ்டம் தரக்கூடிய ஆறு ராசிகளில் மிகவும் அதிக நற்பலனை அடையப்போவது மேஷ ராசி. தன்காரகன் லாப ஸ்தானத்தில் வருவதால் மகா தன யோகம் ஏற்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் 9ம் அதிபதி 11ம் இடத்திற்கும், 10ம் அதிபதி ஏற்கனவே 10ல் சஞ்சாரம் செய்வதால் மிக அதிக நற்பலன்களை மேஷ ராசியினர் பெறுவார்கள்.

குரு உங்கள் ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானம் மீது விழுவதால் உங்கள் முயற்சிகள் சிறக்கும். தைரியமாக முடிவுகளை எடுத்து செயலில் இறங்குவீர்கள்.

வழிபாடு: குல தெய்வ வழிபாடு செய்வது அவசியம்.

ரிஷபம்
குரு பகவானுக்கு ராசிக்கு 10ம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளார். குரு 10ல் இருந்தால் பதவி பறிப்பார் என்பது விதி. ஆனால் யாரும் வேலை, தொழில், பதவி பறிகொடுத்து இருக்கப்போவது இல்லை. மாறாக தான் செய்யக்கூடிய வேலை அல்லது தொழிலில் சிறிய மாற்றங்கள் நிகழும்.வேறு வேலை மாற வாய்ப்புள்ளது.

அதனால் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய விஷயம் உங்கள் வேலை மற்றும் செய்யும் தொழில். உங்களுக்கு சில சங்கடத்தைத் தரக்கூடியதாக இருக்கும். சிலர் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது.

வழிபாடு : குல தெய்வ வழிபாடு, பெருமாள் வழிபாடு செய்வது அவசியம். பிரதோஷ வழிபாடு நன்மை ஏற்படுத்தும்.

​மிதுனம்
குரு பெயர்ச்சியால் அற்புத பலன்களைப் பெறப்போகும் அடுத்த ராசி மிதுனம். குருவின் 5ம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலனைப் பெற உள்ளீர்கள்.

திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை வரம் கிடைக்கும். உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்வதால் உங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

வழிபாடு: குரு, புதன் வழிபாடு செய்வதும், இஷ்ட தெய்வங்களைத் தொடர்ந்து வழிபட்டு வருவதால், உங்கள் வெற்றிக்கு எந்த தடையும் ஏற்படாது.

கடகம்
கடக ராசிக்கு குரு பகவான் 7ம் இடத்திலிருந்து 8ம் இடமான அஷ்டம குருவாக செல்ல உள்ளார். அஷ்டம சனியைப் போலவே, அஷ்டம குருவும் சில பாதகமான பலன்களையே தருவார். பெரும்பாலான துன்பங்கள், பிரச்னைகள் உங்களுக்கான தசா புத்தியின் அடிப்படையில் தான் நடக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

திட்டமிடப்படாத திடீர் செலவு, வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் தேவையில்லாமல் வாய் கொடுத்து வம்பு, வழக்குகளை சந்திக்க நேரிடும்.சில விபத்து கண்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. புதிய முதலீடுகள், பங்குசந்தை போன்றவற்றில் சரியான ஆலோசனை இல்லாமல், கவனமில்லாமல் இருப்பதால் நிதியிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வழிபாடு : பெண் தெய்வங்களை குறிப்பாக சக்தியின் ரூபங்களை வழிபட்டு வர உங்கள் பிரச்னைகள் நீங்கும்.

சிம்மம்
குரு பகவானின் 7ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது மிகவும் விசேஷமானது.வேலை, தொழில், சுற்றுலா தொடர்பாக வெளிநாடு, வெளியூர் பிரயாணங்கள் செய்ய திட்டமிட்டு நிறைவேறாமல் இருந்தவர்களின் கனவு நிறைவேற நல்வாய்ப்பாக அமையும்.

திருமணம், குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு அவர்களின் விருப்பம் நிறைவேறும். குடும்பமே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.

காரியத் தடை நீங்கி சிறப்பாக இலக்கை அடைந்து பெயர், புகழுடன் செம்மையாக வாழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் ஏற்படும்.

​கன்னி
குரு ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்திற்குச் செல்கிறார். இந்த காலத்தில் கன்னி ராசியினர் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பயணங்களின் போது கவனம் தேவை. உங்களின் வீண் பேச்சு, விவாதம் உங்களின் மதிப்பு, மரியாதையைக் கெடுப்பதோடு உங்களைப் பல வகையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

உங்களின் கடன் பிரச்னை அதிகரிக்கும். உங்களின் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. முடிந்த வரை கடன் வாங்குவதைத் தவிர்ப்பது அவசியம்.

வழிபாடு : அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவது நல்லது. முடிந்தால் திருப்பதி சென்றுவருவது உத்தமம்.

துலாம்
துலாம் ராசிக்கு குரு பகவான் 5ம் இடத்திற்குச் செல்கிறார். குருவின் 9ம் பார்வை மிக சிறப்பானது. இதுவரை தடைப்பட்டு வந்த உங்கள் முயற்சிகள், செயல்களில் வெற்றி உண்டாகும். சம்பாதிக்கும் விலைமதிப்பற்ற பணத்தை செலவழிக்க இருமுறை யோசிப்பார்கள்

திருமண தடை நீங்கும், வரன் அமையும். கனவு நினைவாகும். சிலருக்கு வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்க அனுமதி கிடைக்கும். எந்த ஒரு போட்டி, தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்று நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

​விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 4ம் இடமான கேந்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். சுப கிரகங்கள் கேந்திரத்தில் இருப்பதால் பெரியளவு நற்பலன்கள் தராது. எந்த ஒரு செயலுக்கும் சற்று சாதகமானதாக இருக்கிறது.

ஓரளவு நிதி நிலை நன்றாகத் தான் இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும். கெளரவத்திற்காக சில செலவுகள் ஏற்படும்.வெளிநாடு போன்ற பயணங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் நல்ல பெயரும், பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

வழிபாடு: குல தெய்வ வழிபாடு செய்வதோடு, உங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வருவது நல்லது. துர்க்கை, காளி போன்ற ஆக்ரோஷமான தெய்வங்களை வணங்கி வருவது நல்லது.

​தனுசு
தனுசு ராசிக்கு குரு நீச்ச ஸ்தானத்தில் இருந்தார். தற்போது ராசிக்கு 3ம் இடமான தைரியம், வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார். குருவின் பார்வை, ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், தனுசு ராசிக்கு நற்பலன்கள், அதிர்ஷங்கள் கிடைக்கும்.

தொழில் மாற்றம் ஏற்படலாம். வெளியூர், வெளிநாடு தொடர்பான வேலை அல்லது தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதில் நல்ல வெற்றியும், லாபமும் அடைவீர்கள். தொழிலில் பிரச்னைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும், இலக்குகள் அடைவீர்கள். உயர் கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். மண வாழ்க்கையில் இன்பம் பெருகும்.

​​மகரம்
மகர ராசிக்கு 2ம் இடமான குடும்பம், தன ஸ்தானத்தில் குரு அமர்கிறார். பொதுவாக குரு ராசிக்கு 2ல் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பார்கள்.

அதே சமயம் ஒரு ராசிக்கு 2ல் குரு அமர்ந்திருப்பின், அவர் அந்த ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்தையும், 8ம் இடமான ஆயுள், துஸ் ஸ்தானத்தையும் பார்ப்பார். இதன் காரணமாக அந்த ராசிக்கு நோய் அதிகரிக்கும். உடல் நல பிரச்சினைகள் தொந்தரவு கொடுக்கும். குடும்பம், தொழில்,வியாபாரம், உத்தியோகம் போன்ற இடங்களில் எதிரிகள் அதிகரிப்பார்கள்.

இதனால் குருவின் பார்வை பலன் மோசமான பலனைத் தான் மகர ராசிக்கு தருவதாக இருக்கும்

வழிபாடு : சிவ பெருமானை வழிபடுவதும், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வாருங்கள். குரு பகவானை வழிபட்டு வாருங்கள்.

கும்பம்
குரு பகவான் ஜென்ம குருவாக கும்பத்திற்கு அமர்கிறார். குருவின் பார்வையால் யோகம் அடையக்கூடிய ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று. ஜென்ம குருவாக இருந்தாலும், குழந்தை பேறு உண்டாகும். திருமண தடை சந்தித்து வந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

சொத்து தொடர்பான வில்லங்கங்கள் நீங்கும். குருவின் பார்வையால் உங்களுக்குரிய பாக்கியம், யோகத்தை அனுபவிக்க எந்த ஒரு தடையோ அல்லது பிரச்சினையோ இருக்காது. விரய சனியின் தக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கும்ப ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியால் ஆறுதல் தருவதாகவும், அதைத் தாண்டி அதிர்ஷ்டம் தருவதாகவும் இருக்கும்.

மற்ற ராசிகள் இந்த ராசிகளை விட சற்று குறைவான அதிர்ஷ்டங்கள் பெறும்.

மீனம்
மீன ராசிக்கு குரு பகவான் 12ம் இடமான விரய ஸ்தானத்தில் தன காராகன் வருவது பாதகமான பலன்கள் தருவதாக இருக்கும். உங்கள் தொழில், வியாபாரத்தில் பெரியளவில் முன்னேற்றமின்மை, லாபமின்மை ஏற்படும்.

தாயார் உடல் நலனில் பிரச்னை ஏற்படும். உங்களின் சுகமான நிலை பிரச்சினைக்குரியதாக மாறிப்போகும். தொழிலில் திடீர் திருப்பங்கள் நிகழ்வதால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பிரச்னைகள் ஏற்படும். வேலையிழப்பு, திடீர் இடமாற்றம் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்படுவீர்கள்.

தி நிலைமை சற்று ஏற்றம் இருந்தாலும், திடீர் விரயங்கள் உங்களை பயமுறுத்துவதாகவே இருக்கும்.

வழிபாடு: இஷ்டதெய்வம், குலதெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது. மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு வர பிரச்னைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

Related Posts

Leave a Comment