வருகிற 13ம் தேதி மாலை 6.21 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார் குரு பகவான்.
இதனால் மிதுனம், சிம்மம் மற்றும் துலாம் ராசியினர் நன்மையை அடையவிருக்கிறார்கள்.
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்களைப் பெறும் ராசிகள், மேஷம் – ரிஷபம் – விருச்சிகம் – மகரம் – கும்பம் ஆகும்.
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள் என்றால், கடகம் – கன்னி – தனுசு – மீனம் ஆகும்.
குரு பகவான் பற்றிய முழு விபரம்
சொந்த வீடு – தனுசு, மீனம்
உச்சராசி – கடகம்
நீச்சராசி – மகரம்
திசை – வடக்கு
அதிதேவதை – பிரம்மா
நிறம் – மஞ்சள்
வாகனம் – யானை
தானியம் – கொண்டைக்கடலை
மலர் – வெண்முல்லை
வஸ்திரம் – மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் – புஷ்பராகம்
நிவேதனம் – கடலைப்பொடி சாதம்
உலோகம் – தங்கம்
இனம் – ஆண்
உறுப்பு – தசை
நட்பு கிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம் – புதன், சுக்கிரன்
மனைவி – தாரை
பிள்ளைகள் – பரத்வாஜர், கசன்
பிரதான தலங்கள் – ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -தேவகுரு