முன்னேற்றமான நாளாக இருக்கும் : 8-11-2021 தினப்பலன்

by Column Editor
0 comment

இன்றைய ராசி பலன்!

மேஷம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். இன்றைய நாளை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் திருப்தி நிலவும். பணியிடத்தில் பதட்டம் காணப்படும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. குடும்பத்தில் ஓரளவுக்கு அமைதி நிலவும். சர்ச்சையை ஏற்படுத்தும் விஷயங்கள் பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.

ரிஷபம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். அணுகுமுறையில் நிதானம் அவசியம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். நிலுவையிலிருந்த வேலை எல்லாவற்றையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே சுமுகமான சூழல் காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரித்து தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. நிதி நிலை சாதகமாக இருக்கும். வீண் செலவு ஏற்படலாம் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கடகம்

சௌகரியமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையைச் சுறுசுறுப்பாக குறித்த நேரத்துக்கு முன்னதாகவே முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற நாளாக இருக்கும்.

சிம்மம்

கடினமான சூழல் மிகுந்த நாளாக இருக்கும். ஆன்மிகம், கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். நற்பலன்களைப் பெற சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.

கன்னி

கடினமான சூழலை எதிர்கொள்ள நிதானத்துடன் செயல்பட வேண்டும். மனதில் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படும். வேலை சூழல் சவால் மிகுந்ததாக இருக்கும். தடைகள் சிலவற்றை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

துலாம்

தைரியத்துடன் இன்றைய நாளை எதிர்கொள்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நேர்மையான அணுகுமுறையை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

அனுகூலமான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். உறவு நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.

தனுசு

இன்றைய நாள் நல்லபடியாக கழிய சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. பணியில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்

அமைதியின்மை காணப்படும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். இதைத் தவிர்ப்பது நல்லது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பணத்தை சாதுரியமாகக் கையாள்வது கடினமாக இருக்கும்.

கும்பம்

உற்சாகம் காரணமாகச் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். நிதானத்துடனும் அமைதியுடனும் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் திறமையுடன் செயல்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுச் சிறப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். சிலருக்குப் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

மீனம்

புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் வெற்றிகரமாக இருக்கும். மிக வேகமாக வேலையைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நேர்மையாக நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை லாபகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

Related Posts

Leave a Comment