தீபாவளி பண்டிகையை மக்கள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக பட்டாசு வெடித்து ,இனிப்புகள் பரிமாறி கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் சமயம் பட்டாசுக்களை வெடிக்கும் போது , விபத்தை தவிர்க்கும் வகையில் கவனமாக கையாளுவது அவசியம்.
பட்டாசுகளை வெடிக்கும் போது செய்ய வேண்டியவை:-
பட்டாசுகளை திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும்
பருத்தியினால் ஆன ஆடைகளை மட்டுமே அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும்
பட்டாசு வெடிப்பவர்கள் கண்டிப்பாக காலணி அணிந்து இருத்தல் வேண்டும்.
சிறு குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது நீண்ட குச்சியை வைத்துக்கொண்டு திரியை பற்ற வைக்க வேண்டும்.
முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்.
கம்பி, மத்தாப்பு ,சங்கு சக்கரம், புஸ்வாணம் போன்றவற்றை கொடுத்து பின் தண்ணீர் கொண்டு அணைக்க வேண்டும்.
பொருட்கள் மீது தீப்பிடித்தால் தண்ணீர் மற்றும் மணல் கொண்டு அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்ட இடத்தை மெல்லிய பருத்தித் துணி கொண்டு மூடி உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது செய்யக்கூடாதவை:-
சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்க கூடாது
பாலிஸ்டர் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க கூடாது
பட்டாசுகளை ஒருபோதும் கையில் வைத்து வெடிக்கக் கூடாது
குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக்கூடாது
பெட்ரோல், பங்க் மருத்துவமனை பள்ளிக்கூடங்கள், கோயில்கள், டிரான்ஸ்பார்மர்கள் ,மின் கம்பங்கள் அருகே பட்டாசு வெடிக்க கூடாது.
தீப்புண்ணின் ஒட்டியுள்ள ஆடைகளை அகற்றக்கூடாது
ஆடையில் தீப்பற்றி கொண்டால் ஓடக்கூடாது ;அது தீயின் வேகத்தை அதிகப்படுத்தும்.
பாட்டில்களில் வைத்து ராக்கெட் விடுவது பட்டாசை பற்ற வைத்து கையால் தூக்கி போடுவது கூடாது