ஒரு கிலோ ஸ்வீட் 25 ஆயிரம்!அப்படியென்ன ஸ்பெஷல்

by Column Editor
0 comment

தீபாவளியை முன்னிட்டு அனைத்து தரப்பு மக்களும் அடுமனைகளுக்கு சென்று ஏதேனும் இனிப்பு வகைகளை வாங்கி சுவைப்பதும், பரிசளிப்பதும் எதார்த்தம்.

ஆனால், குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் உள்ள இனிப்பகம் ஒன்றில், தீபாவளி சிறப்பு இனிப்புகளை சுவைப்பதற்கு பல ஆயிரம் நீங்கள் செலவிடவேண்டியிருக்கும்.

விலை உயர்ந்த நெளஜா உலர் பழங்கள், மாம்ரா பாதாம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்வீட்ஸ்-இல் தங்க படலம் போர்த்தப்பட்டுள்ளது.

இதனை சுவைக்க வேண்டுமானால் கிலோவிற்கு ரூ.25,000 செலவிட வேண்டியிருக்கும். விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் இதனை அதிகளவில் வாங்கிச் செல்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment