நீண்டநாள் கனவு நிறைவேறிருச்சு! கோலாகலமாக காதலரை கரம்பிடித்த பிரபல சீரியல் நடிகை! வைரலாகும் எமோஷனல் வீடியோ!!

by News Editor
0 comment

தமிழ் சினிமாவில் கதகளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிக்க தொடங்கியவர் நடிகை வைஷாலி. அதனை தொடர்ந்து அவர் காதல் கசகுதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி வைஷாலி சின்னத்திரையில் மாப்பிள்ளை, லக்ஷ்மி வந்தாச்சு, ராஜாராணி உள்ளிட்ட ஏராளமான தொடர்களிலும் நடித்து வந்தார்.

அவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கோகுலத்தில் சீதை போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை வைஷாலி சில ஆண்டுகளுக்கு முன்பு சத்யாதேவ் என்பவரை காதலிப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் அண்மைக்காலமாக வைஷாலிக்கு திருமணம் என்ற தகவல்களும் பரவி வந்தது. இதற்கிடையில் அவர் தனது வருங்கால கணவருடன் திருமண ஷாப்பிங் சென்ற புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று நடிகை வைஷாலிக்கு மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment