எங்களுக்கு பிடிச்சிருக்கு… உங்களுக்கு ஏன் இப்படி எரியுது..?

by News Editor
0 comment

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் 45 வயதானவரை திருமணம் செய்து கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான மேகனா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே மேகனாவின் கணவர் வீட்டை விட்டு ஓடி விட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்கிற தகவல் தெரியவில்லை.

இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த மேகனா 2வதாகசிக்கதனேகுப்பே கிராமத்தை சேர்ந்த 45 வயதான சங்கரண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்படி, இரு வீட்டரின் அனுமதியுடன் மேகனா மற்றும் சங்கரண்ணாவிற்கு நேற்று (19-10-2021) சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது.

தங்களின் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் சங்கரண்ணா-மேகனா ஆகியோரின் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த சிலர் வயதானவரை திருமணம் செய்ததாக மேகனாவுக்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment