மகாலட்சுமியின் காயத்ரி மந்திரம்

by Web Team
0 comment

வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது செல்வம். அதன் அதிபதியாகவும், அதை அள்ளி வழங்குபவளாகவும் திகழ்பவள் மகாலட்சுமி.

அவளே வீரர்களிடம் வீரலட்சுமி யாகவும், தேசத்தைச் செழிக்கச் செய்யும் ராஜ்ஜிய லட்சுமியாகவும், உணவுப் பொருட்களில் தான்ய லட்சுமியாகவும், யோகிகளிடம் யோக லட்சுமியாகவும், மனச் சலனங்களை நீக்கும் தைரிய லட்சுமியாகவும், பிள்ளைச் செல்வம் அருள்வதில் சந்தான லட்சுமியாகவும், வீடுகளில் கிரக லட்சுமியாகவும், விளக்குகளில் தீபலட்சுமியாகவும் திகழ்கிறாள்.

நாம் அனைவரும் நம் வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து அருள ஆசைப்படுவோம், ஆனால் அதற்குரிய முறையை செய்வ தில்லை, அதை முறையாகவும் செய்வதில்லை. தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுதல், தலைவாயிலைக் கழுவி கோலமிட்டு பூக்களால் அலங்கரித்தல், வெள்ளிக்கிழமைகளில் வில்வத்தால் அர்ச்சித்து திருமகளை வணங்குதல், இனிப்பு தானம், குலதெய்வ வழிபாடு ஆகியவற்றால், லட்சுமி கடாட்சத்தை பரிபூரணமாகப் பெறலாம்.

லக்ஷ்மி கொடுப்பது செல்வம் பணம் மட்டும் அல்ல. உலகில் உள்ள அனைத்து வித செல்வத்தையும் தருபவள் ஸ்ரீதேவியே. அனைத்து தேவியர்களிலும் முதல் தாயகத் திகழ்கிறாள். இவளை தாயார் என்று அன்போடும், பக்தியோடும் பக்தர்கள் அழைப்பார்கள்.

மகாலட்சுமியை வணங்கி கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நிச்சயம் செல்வம் சேர்க்க ஒரு நல்ல வழி பிறக்கும். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம்.

லக்ஷ்மி காயத்ரி மந்திரம்:

ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

பொருள்: ஓம் தெய்வங்களில் சிறந்தவளே, விஷ்ணுவின் பத்தினியே, உங்களை வணங்குவதன் பயனாக எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன்.

Related Posts

Leave a Comment