நடிகர் மஞ்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு.

by Lifestyle Editor
0 comment

கடந்த மக்களவை தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியில் இணைந்து போட்டியிட்டார் நடிகர் மன்சூர் அலிகான்.

இதன்பின் கடந்த சட்டசபை தேர்தலுக்கு அக்கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.

இப்படி ஏதாவது அரசியல் சம்பந்தமாக அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்றும் பலராலும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் மன்சூர் அலிகானுக்கு 2,500 சதுர அடியில் உள்ள வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள்.

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் அதற்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment