காட்டு யானைகளை பற்றி நீங்கள் அறிந்திராத உண்மைகள்

by Lifestyle Editor
0 comment

உலகின் மிக பெரிய விலங்கு எது என்று சிறு குழந்தைகளிடத்தில் கேட்டால் முதலில் அவர்கள் கூறுவது யானை தான். ஆனால் நமக்கு தெரிந்தது தான் அது தவறு திமிங்கலம் தான் பெரியது என்று. சரி இருக்கட்டும் இந்த தொகுப்பில் காட்டு யானைகளை பற்றிய ஆச்சர்யமான தகவல்களை பார்க்கலாம்.

பாலூட்டி வகைகளிலேயே மிக அதிக கர்ப்ப காலம் கொண்டது எது தெரியுமா? யானை மட்டும் தான். யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது.

22 மாதங்கள் குட்டியை சுமக்கிறது. மிகவும் அரிதாக எப்போதாவது இரண்டு குட்டிகளை ஈனும். யானைகள் சராசரியாக 60 வயது வரை வாழ்பவை என்ற போதும், பெண் யானை 50 வயது வரை கர்ப்பம் தரித்து குட்டியை ஈனும்.

புதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு கண் பார்வை தெரியாது. யானைக் குட்டி பிறக்கும் போது அதிகபட்சமாக 115 கிலோ எடை இருக்கும். ஆனால், இவ்வளவு பெரிதாக இருந்தாலும் கூட பிறந்த சிறிது நேரத்திலேயே யானைக்குட்டியால் எழுந்து நிற்க முடியும்.

ஏன்னென்றால் காட்டில் இருக்கும் பிற வேட்டை விலங்குகளான சிங்கம், புலி ஆகியவற்றிடம் இருந்து தப்பிக்க உடனடியாக எழுந்து நிற்பதும், நடப்பதும் அவசியம்.

யானையின் சருமம் மிகுந்த உணர்திறன் கொண்டது. யானையின் தோல் தடிமனாக இருந்தாலும், தன் மீது ஒரு சிறு ஈ அமர்வதைக் கூட உணர்ந்து கொள்ளும்.

யானைகள் நீர்நிலைகளைக் கண்டால் சிறு குழந்தைகள் போல, உடனே ஓடிச்சென்று, உடல் முழுவதும் நனைய குளிக்கும். நீரில் மூழ்கியும், தண்ணீரை உடலின் மீது பீய்ச்சி அடித்தும் குதூகலத்துடன் விளையாடும்.

மேலும் இந்த யானைகள் ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கும். அதற்க்கு காரணம் யானையின் மிகப்பெரிய உடல் அமைப்பே. யானை நீந்தும் போது தனது பெரிய நுரையீரல்களால் மிதக்கும் திறனை பெறுகிறது.

தும்பிக்கையை நீருக்கு மேலே நீட்டி காற்றை சுவாசிக்கிறது. யானை தனது பெரிய உடலைத் தாங்க கால்களை எப்போதும் பயன்படுத்தும். மிதப்பதால் யானை தனது கால்களுக்கும், மூட்டுகளுக்கும் ஓய்வைத் தருகிறது.

யானை பல வகையான ஒலியை எழுப்பக்கூடியது. உற்சாகத்தின் போதும், துன்பத்தின் போதும் அல்லது ஆக்ரோஷமாக இருக்கும் போதும் தும்பிக்கையை தூக்கி எழுப்பும் பிளிறல் ஒலியை 9 கி.மீ க்கு அப்பால் உள்ள மற்றொரு யானையால் கேட்க முடியும்.

மேலும், தனது காலின் கீழ் உள்ள தசையின் மூலம் அதிர்வுகளையும் கேட்கக்கூடியது யானை. மேலும், தனது தும்பிக்கையை தரையில் வைத்தும், அதிர்வுகளை உணர்ந்து அதற்கேற்றது போல் செயல்படக் கூடியது.

யானை 40000 தசைகள் உள்ள தனது, தும்பிக்கையை பயன்படுத்தி ஒரு பொருளின் அளவு, வடிவம் மற்றும் வெப்பநிலையை உணரக் கூடியது. யானை தும்பிக்கையை உணவை எடுக்கவும், தண்ணீரை உறிஞ்சி அதன் வாயில் ஊற்றி குடிக்கவும் பயன்படுத்துகிறது. தும்பிக்கையை நிலத்தில் ஊன்றி சுற்றுப்புற அதிர்வுகளையும் கேட்கும்.

உலகில் அனேக எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள் மற்றொன்று ஆஃப்ரிக்க யானைகள்.

காட்டு யானையின் சராசரி வாழ்நாள் 50 முதல் 70 ஆண்டுகள். லிங் வாங் எனறு பெயரிடப்பட்ட ஆசிய யானை மிக அதிகமாக 86 வயது வரை வாழ்ந்தது. இந்த மிகப் பெரிய யானை 11000 கிலோ எடையும், 13 அடி உயரமும் இருந்தது.

காட்டு யானைகளுக்கு தலைமை தாங்குவது வயதான பெண் யானைதான். இது கூட்டத்தில் இருக்கும் , ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு வேலைகளை ஒதுக்கி கொடுக்கும்.

ஆபத்து என்று சின்னதாக தெரிந்தாலும் குட்டிகளை நடு வில் விட்டு, அத்தனை பெண் யானைகளையும் சுற்றி அரண் அமைத்து நிற்க்கும். யானைகளோட ‘டேஞ்சர் சோன்’ 30 மீட்டர்.

மற்ற விலங்குகளோ, மனிதர்களோ அந்த எல்லைக்குள்ள வருவதற்க்கு யானைகள் அனுமதிக்காது. யானைகள், உணவு தேடலுக்காக ஒருநாளைக்கு 30 to 50 கி.மீ நடக்கும்.

வளர்ப்பு யானைகளுக்கு புளிப்பு, உப்பு, மஞ்சள், சுண்ணாம்பு சத்துள்ள உணவுகளை அடிக்கடி கொடுப்பார்கள். ஏனென்றால் யானைகளுக்கு புளிப்பு, உப்பு, மஞ்சள், சுண்ணாம்பு, எலும்புகளுக்கு தேவையான கால்ஸியம் சத்துக்கள் அவசியமானது.

ஆனால் காட்டு யானைகளுக்கு இயற்கைதான் உணவு. கோடை காலத்தில், வழக்கமான நீரோடைகள், குட்டைகள் வற்றி வறண்டபிறகு மான், காட்டெருமை போன்ற மற்ற விலங்குகள் நீருக்கு அலைமோதி இறக்க ஆரம்பிக்கும்.

அதில் தப்பிப் பிழைத்த விலங்குகள் மட்டும் நீருக்காக யானைகளை பின்தொடரும். யானைகள் இந்த விலங்குகளை ஒன்றும் செய்யாது. தலைமை யானை தன்கூட்டத்தை கூட்டிக்கொண்டு அதுவரைக்கும் போகாத ஒரு திசையில் பயணம் தொடரும்.

அங்க போய் ஒரு குறிப்பிட்ட மணல் பாங்கான இடத்தில் காலால் உதைத்து தோண்டும். மற்ற யானைகளையும் தோண்ட சொல்லும். நாலஞ்சு அடில, தண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கும் வேண்டிய மட்டும் குடிக்கும்.

இதுபோல தன்னோட வழித்தடங்களில், பத்துக்கும் மேற்பட்ட ரகசிய இடங்கள வைத்திருக்கும். இந்த ரகசியங்கள் தலைமை பெண் யானைக்கு மட்டுமே தெரியும். அதோட மூதாதையர்கள் அதுக்கு சொல்லி கொடுத்த பாதைகள். எத்தனை காலங்கள் ஆனாலும் மறக்காது.

மேலும் யானையின் பிரசவ காலங்களில், வயிற்றுப்புண் ஆற… பல கி.மீட்டர்கள் பயணித்து, ஒருவித விசேஷமான புற்கள், தாவரங்களை உண்ணும். இதுவும் தலைமுறை தலைமுறையா சொல்லி கொடுக்கப் பட்டிருக்கும்.

வயது முதிர்ச்சியின் காரணமா, ஒரு கட்டத்திற்கு மேல் , தலைமை பதவியை திறமையான இன்னொரு வயதும், அனுபவமும் முதிர்ந்த பெண்யானைக்கு மாற்றிக் கொடுத்துவிடும். அதை திறமையுள்ள யானைக்கு மட்டுமே கொடுக்கும்.

அப்படி தலைமை மாறினால், முன்பு தலைமை பதவியில் இருந்த யானைகூட, புதிய தலைவிக்கு கட்டுப்பட்டே நடக்கும். ரொம்ப வயசான, நோய்வாய்ப்பட்ட, நடக்க முடியாத, இனி வாழ்வது கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட யானைகள் தன் கூட்டத்திடம் பிரியாவிடை பெற்று பிரிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போய், உணவு உண்ணாமல் இருந்து தற்கொலை செய்து கொள்ளும்.

பிரியும்போது கூட்டத்தின் மொத்த யானைகளும் அந்த தற்கொலை செய்யப்போகும் யானையை சுற்றிநின்று அழும். ஆப்பிரிக்க யானை ஆராய்ச்சியாளர்கள், ஆப்ரிக்க கண்டம் முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கான யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டு பிடித்தார்கள்.

இது தற்கொலைதான் என்று உறுதியாக சொல்கிறார்கள். ஆப்பிரிக்காவின் சமவெளிக் காடுகள் போல் அல்லாமல், ஆசிய யானைகளின் வாழ்விடங்கள், பெரும்பாலும் மலைக் காடுகளை சார்ந்தே இருப்பதால் காசிரங்கா, வியட்நாம் போன்ற ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே, இதுபோன்ற யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டார்கள்.

இந்தியாவில் யானைகளுக்கான பாரம்பரிய 88 வலசை பாதைகள் இருக்கிறது. இப்போது பெரும்பாலும், அந்த பாதைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது. யானை இனங்களை அளிக்காதீர்கள். எந்த காரணத்தை கொண்டும் காடுகளில் மது பாட்டில்களை உடைத்து வீசி எறியாதீர்கள்.

Related Posts

Leave a Comment