பாசமலரை நினைவுபடுத்தும் ரஜினி, கீர்த்தி சுரேஷ்… ‘அண்ணாத்த’ படத்திலிருந்து அசத்தல் பாடல் வெளியானது!

by News Editor
0 comment

‘அண்ணாத்த’ திரைப்படத்திலிருந்து மருதாணி பாடல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

சமீபத்தில் அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மருதாணி என்ற மூன்றாம் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் ரஜினி கீர்த்தி சுரேஷ் இருவரும் பாசமலர்களாக ஜொலிக்கின்றனர். இமான் இசையில் பாடல் அருமையாக அமைந்துள்ளது. நாகாஷ் அஜீஸ், அந்தோணி தாசன், வந்தனா சீனிவாசன் ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். மணி அமுதவான் பாடலை எழுதியுள்ளார்.

அண்ணாத்த திரைப்படம் விஸ்வாசம் படத்தைப் போலவே கிராமப் பின்னணி, குடும்ப கதைக்களம் ஆகியவற்றில் அமையும் என்று தெரிகிறது. அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

Related Posts

Leave a Comment