பிரித்தானியா எம்.பி-க்கு கத்திக்குத்து! தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது நடந்த பயங்கரம்

by News Editor
0 comment

பிரித்தானியாவில் தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கன்சர்வேடிங் எம்.பி சர் டேவிட் அமெஸ் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எசெக்ஸில் உள்ள Southend West தொகுதி எம்.பி-யான சர் டேவிட் அமெஸ், வெள்ளிக்கிழமை Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் நடந்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது குத்தியால் குத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது நடந்து வந்த நபர், கத்தியால் சர் டேவிட் அமெஸ்-ஐ பலமுறை குத்தியாக கூறப்படுகிறது.

காயமடைந்த 69 வயதான சர் டேவிட் அமெஸ்-க்கு சம்பவயிடத்திலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்தியால் குத்தப்பட்ட எம்.பி சர் டேவிட் அமெஸ்-ன் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் தெரியவில்லை.

சம்பவயிடத்தில் பொலிசார் இருப்பதாக கூறப்படுகிறது மற்றும் அந்த இடத்தை சுற்றியுள்ள சாலை மூடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் நபரை ஒருவரை கைது செய்ததாக எசெக்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment