ஈழத்தில் பாவம் தீர்க்கும் அதிசய இடம்! தவறு செய்த இலங்கை தமிழ் மன்னன் இராவணனால் கிடைத்த பொக்கிஷம்

by News Editor
0 comment

இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவு. இந்த தீவுக்குள் பல அதிசயங்கள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. சில சமயம் மனிதனின் செயல் கூட அதிசயம் தான்.

ஆனால், கடவுள் படைத்த இயற்கையை விட பெரிய அதிசயத்தை நாம் உலகத்தில் கண்டு விட முடியாது. அவற்றில் ஒரு அழனிய அதிசயமான இடத்தை தான் பார்க்க போகின்றோம்.

ஈழத்தின் அதிசயம் கன்னியா வெந்நீரூற்றுக்கள் சமய நம்பிக்கையிலும், விஞ்ஞான ரீதியிலும் பல சிறப்புகளைப் பெற்று இன்று வரை தனித்துவமாக மிளிர்கின்றது.

இலங்கையில் இருக்கும் கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகளிலும் ஏழு வித்தியாசமான வெப்பநிலைகளில் தண்ணீர் இருப்பதுதான் அதிசயம்.

இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பெற்ற இடங்களுள் கன்னியா வெந்நீரூற்று முக்கியம் பெறுகின்றது.

திருகோணமலை நகரில் இருந்து 3.9 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது கன்னியா வெந்நீரூற்று. இக்கிணறுகள் 90 தொடக்கம் 120 சென்ரி மீற்றர் ஆழமுடையவை. சதுர வடிவானவை.
இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில், நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அதிசய கன்னிய கிணறுகளுக்கு என்று என தனித்துவமான வரலாற்று கதை உள்ளது.

பொதுவாகவே திருகோணமலை சம்பந்தப்பட்ட ஐதீக, புராணக் கதைகள் பெரும்பாலும் இராவணன் சம்பந்தப்பட்டவை.

கன்னியா வெந்நீரூற்றும் இராவணனோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகத்தான் நம்பப்படுகின்றது.சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்த இராவணன் திருகோணமலையில் குடிகொண்டிருக்கும் கோணேஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு வீற்றிருந்த சிவலிங்கத்தைக் கண்டு வியந்து அந்த லிங்கத்தை அவனின் தாயின் வணக்கத்திற்காக கொண்டு செல்ல விரும்பியுள்ளார்.
இதனால் பாறையின் மீது இருந்த சிவலிங்கத்தை தனது வாளால் வெட்டி பெயர்த்து எடுக்க முற்பட்டான். இதனால் கடும் கோபம் கொண்ட சிவன் அந்த பாறையை தனது காலால் அழுத்தியதால் இந்த பாறைக்குள் சிக்குண்டான் இராவணன்.

இதைக்கேள்வியுற்ற அவன் தாய் தனது மகன் இறந்து விட்டதாக எண்ணி அதிர்ச்சியில் உயிரிழந்தாள். ஆனால், இராவணனோ இறக்கவில்லை. சிவனை பிரார்த்தனை செய்து தாம் செய்த செயலை மன்னிக்கும் படி வேண்டிக்கொண்டான். தனது பக்தனை சிவனும் மன்னித்தார்.

கோணநாயகரிடம் பெற்ற லிங்கத்தை கையிலேந்திக் கொண்டு இராவணன் செல்லும்போது, விஷ்ணு அந்தண வடிவம் எடுத்து இராவணனைச் சந்தித்து தாயார் உயிர் நீத்த செதியைத் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் இராவணன் துக்கக் கடலில் மூழ்கினான்.

அந்தணன் அவரைத் தேற்றியபின், இறுதிக் கிரியைகளைச் செயுமாறு நினைவுறுத்தி, இப்புண்ணிய தலத்தில் கருமாதிக் கிரியைகளைச் செதால் அவர் மோட்சத்தை அடைவது திண்ணம் என்று கூறினார்.

ஈமக்கிரியைகளை அந்தணரையே செயச் சோல்லி இராவணன் வேண்ட, அதற்குச் சம்மதித்த அந்தணர் இராவணனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று, அவ்விடத்தில் தமது கையில் இருந்த தடியினால் ஏழிடத்தில் ஊன்றினார்.

அந்தண வடிவம் கொண்டு மகாவிஷ்ணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுக்கள் தோன்றின எனப் புராணங்ககள் கூறுகின்றன.

உலகில் பல இடங்களில் இது போன்ற வெந்நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன.எனினும் ஆன்மாக்கள் பாவம் தீர்ந்து இந்த இடத்தில் முத்தியடையும் என்று இன்று வரை நம்பப்படுகின்றது.
இலங்கையில் வெந்நீர் ஊற்றுக்கள் 10 இடங்களில் காணப்படுகின்றன.

தமிழர்களுக்கே உரித்தான இத்தகைய பொக்கிசங்கள் இன்று பல காரணங்களினால் அழிவை நோக்கி பயணிக்கின்றது.

அவற்றை பாதுக்காத்து கொள்வது தமிழர்களின் கடமையும் கூட.

Related Posts

Leave a Comment