சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாட ஏற்ற நேரம் எது?

by Web Team
0 comment

நவராத்திரி என்பது அம்மனுக்கு உகந்த காலமாகும். துர்கை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை இந்த காலக்கட்டத்தில் வணங்குகிறோம். நவராத்திரியின் ஒன்பதாம் நாளை மகா சரஸ்வதி பூஜை எனக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தில் சரஸ்வதியை வணங்கினால், அனைத்துக் கலைகளிலும் சிறந்து விளங்க முடியும் என்பது நம்பிக்கை. நல்லி கல்வி அறிவு கிடைக்கும்.

சரஸ்வதி பூஜை தினத்தன்று வீடுகளில் தோரண மேடை அமைதி, அதில் கலசம் வைத்து சரஸ்வதி தேவி படம் அல்லது விக்ரகம் வைத்து, பூஜை செய்ய வேண்டும். வீட்டின் பூஜை அறை அல்லது வரவேற்பறையில் தோரண மேடை அமைக்கலாம். புத்தகங்களை அடுக்கி அதன் மீது சரஸ்வதி தேவி படம் அல்லது விக்ரகத்தை வைத்தும் வழிபடலாம்.

சரஸ்வதி பூஜை அன்று காலையில் எழுந்து குளித்து, சரஸ்வதி தேவி படத்துக்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்காரம் செய்து, பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை நினைத்து “கணபதி குணநிதி வேண்டும் வரம் தரும் அருள்நிதி போற்றி” கூறி பூஜையைத் தொடங்குவது நல்லது.

அக்டோபர் மாதம் 14ம் தேதி (இன்று) வியாழக்கிழமை சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட வேண்டும். 15ம் தேதி விஜயதசமி கொண்டாட வேண்டும்.

காலை 6 மணி முதல் 7 மணி வரை (குரு ஹோரை) – சரஸ்வதி பூஜை மட்டும்

காலை 9 மணி முதல் 12 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை, சந்திர ஹோரை) – ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

பகல் 1 மணி முதல் 2 மணி வரை (குரு ஹோரை) – சரஸ்வதி பூஜை

பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) – ஆயுத பூஜை மட்டும்

இரவு 9 மணி முதல் 11 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) – ஆயுத பூஜை மட்டும்

மதியம் 1.30 முதல் 3 மணி வரை ராகு காலம், மாலை 6 முதல் 7.30 வரை எமகண்டம் வருகிறது. இந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டாம்.

Related Posts

Leave a Comment