கூரையை பிய்த்துக்கொண்டு படுக்கறையில் விழுந்த விண்கல்.. மயிரிழையில் உயிர் தப்பித்த பெண்!

by News Editor
0 comment

வீட்டில் நிம்மதியாக உறங்கிகொண்டிருந்த பெண் ஒருவரின் வீட்டில் திடீரென ராட்சத கல் ஒன்று விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கனடா பிரிட்டிஷ் கொலம்பிய பகுதியில் வசிக்கும் ரூத் ஹாமில்டன் பெண் ஒருவர்படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று விண்வெளியில் இருந்து ஒரு விண்கல் அவளது வீட்டின் கூரையில் விழுந்துள்ளது.

இந்த விண்கல் ஆனது வீட்டின் கூரையை துளைத்து அந்த பெண்ணின் படுக்கையில் அவருக்கு மிக அருகில் வைத்திருந்த தலையணை மீது விழுந்தது. இந்த விண்கல் பெண்ணிடம் இருந்து சில அங்குல தூரத்தில் விழுந்ததால், அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அக்டோபர் 4 இரவு நடந்தது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹாமில்டன் விக்டோரியா கூறுகையில், “நான் திடீரென்று பெரிய சத்தம் கேட்டு எழுந்து லைட்டை ஆன் செய்தேன். என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு முன் ஒரு இரவில், லூயிஸ் ஏரி அருகே விண்கற்கள் விழுந்ததை மக்கள் பார்த்தனர்” என்றார்.

இந்த திகிலூட்டும் சம்பவத்தில், ஹாமில்டன் தப்பினார். படுக்கை அறை லைட்டை ஆன் செய்ததும், ​​அவரது தலையணையில் ஒரு விண்கல் விழுந்திருப்பதைக் கண்டார்.

உடனே அவர் உதவி எண்ணான 911 க்கு போன் செய்து அருகில் உள்ள கட்டுமான தளத்திலிருந்து வந்ததா என்று கண்டுபிடிக்க முயன்றார். ஆனால், விசாரணையில், விண்வெளியில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் வந்ததாகக் அங்கிருந்த மக்கள் கூறினர்

Related Posts

Leave a Comment